துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்றிரவு (அக்.27) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் மாகாணங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிந்திகியில் பல கட்டடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.




