துஷ்ட சக்திகளை விலக்கும் அற்புத சாம்பிராணி…!! எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..??
சாம்பிராணி என்றாலே அனைவருக்கும் பக்திதான் ஞாபகத்தில் வரும். இந்த நிலையில் துஷ்ட சக்திகளை விலக்கும் அற்புத சாம்பிராணி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கண் திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகள் மற்றும் எதிர்மறை சக்திகள் வீட்டிலிருந்து விளக்குவதற்கு எளிய மூலிகை சாம்பிராணியை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி தயாரிப்பது என்பதை இந்த பதிவில் தற்போது பார்க்கலாம்.
அருகில் இருக்கும் நாட்டு மருந்து கடையில் வெண்கடுகு, மருதாணி விதை, வில்வ இலை, சாம்பிராணி, அருகம்புல், வேப்பிலை, நொச்சி, குங்கிலியம் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். அனைத்தையும் ஈரம் இல்லாத இடத்தில் நன்கு வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு அதை பொடி செய்து கொள்ள வேண்டும். இறைவனுக்கு சாற்றி காய்ந்துபோன மலர்களையும் இந்த பொடியுடன் சேர்த்து நெருப்பில் இடலாம்.
இந்த சாம்பிராணி கொண்டு செவ்வாய் மற்றும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு முழுவதும் தூபம் போட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் எதிர்மறை சக்திகள் விலகி வீட்டில் அமைதி உண்டாகும் என கூறப்படுகிறது.




