வலிமையாகவும், சுறு சுறுப்பாகவும் இருப்பதற்காக, அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தினமும் காலை நீச்ச தண்ணீரையும் , காலை உணவாக பழைய சாதம் தான் சாப்பிடுவார்கள். நம்மை போன்று டீ, காபி குடிக்கவில்லை.
கால்சியம், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் பழைய சாதத்தில் கொட்டிக்கிடக்கிறது. இதுமட்டுமில்லாமல், அமெரிக்க ஆய்வின்மூலம் பழைய சோறு தான் உலகிலேயே மிகவும் ஆரோக்கியமான காலை உணவு என்று தெரியவந்துள்ளது.
குளிர்ச்சி தருவதில், பழைய சாதம் பெரும்பங்கு வகிக்கும். மேலும், வயிற்றில் அமிலத்தன்மை உருவாவது மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்த்துவைக்கும்.
அல்சர், பழைய சாதம் மற்றும் நீச்ச தண்ணீர் குடிப்பதனால் செரியாகும். அதுமட்டுமில்லாமல், பழைய சாதம் மற்றும் நீச்ச தண்ணீரினால் சருமத்தில் இயற்க்கையாக கொலாஜன் உற்பத்தியாகும். இது மூலம், சருமம் ஈரப்பதமாகவும், பொலிவாகவும் இருக்கும்.
மேலும், தலை முடி பொலிவாகவும், உறுதியாகவும் இருக்க பழைய சாதம் மற்றும் நீச்ச தண்ணீர் பருகலாம். சர்க்கரை நோயாளிகள் மட்டும் மருத்துவரிடம் பழைய சாதம் சாப்பிடுவதற்கு முன் ஆலோசனை பெறுவது நல்லது .




