கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
ஒரு சில வீடுகளில் கேஸ் சிலிண்டர் சீக்கிரமாக தீர்ந்து போகும். இந்நிலையில் கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்ற கேள்விக்கு இந்த பதிவில் பதில் காணலாம்.
சமையல் தொடங்குவதற்கு முன்பே அனைத்து பொருட்களையும் அருகில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகும். பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ஒரே சமயத்தில் அனைத்து பொருட்களையும் வேகவைத்து விடலாம். இதனால் எரிவாயு விரயம் குறையும்.
வேக வைப்பதற்கு அதிக நேரம் தேவை என்றால் அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்த வேண்டும். அடுப்பு சரியாக எரியவில்லை என்பதற்காக பர்ணரை குத்தி பெரிது செய்தல் கூடாது.
அடுப்பை அணைப்பதுடன் கேஸ் சிலிண்டரையும் அணைத்தால் எரிவாயு விரைவில் காலியாகாது. கண்டிப்பாக இந்த குறிப்புகளை எல்லாம் தெரிந்து கொண்டு கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி பாருங்கள்.




