தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 19) சென்னை வருகிறார்.
மாமல்லபுரம் அருகே நடைபெற உள்ள இந்த முக்கிய மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாநிலங்களின் வளர்ச்சி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.




