ஆந்திரா: லோகேஷ்வர் (45) – உஷா (34) தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு லோகேஷ்வர் அவருடன் சண்டை போட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை. 19) உஷா வேலைக்குச் சென்றபோது அவரை சாலையில் வழிமறித்த லோகேஷ்வர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். போலீசார் லோகேஷ்வர் வீட்டுக்குச் சென்றபோது அவர் தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.




