சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்காக 3,000 கனஅடி தண்ணீரை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். இந்த நீர் வலது கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.
நீர் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு விவசாயிகளை சந்தித்த முதலமைச்சர், அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து விவசாயிகள் சார்பில் முதலமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீர் திறக்கப்பட்டுள்ளதால் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




