தமிழ்நாட்டில் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர்கள் சத்யராஜ், கார்த்தி, நாசர் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோரின் வீடுகளுக்கு இன்று (அக். 16) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ள நிலையில், உடனடியாக அவர்களது வீடுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், அது புரளி என தெரியவந்துள்ளது.




