நடிகர் மோகன்லால் தங்கள் வீட்டில் இருந்து லட்சம் மதிப்புள்ள கிருஷ்ணர் சிலையை எடுத்துச் சென்று, அதற்குப் பதிலாக பழைய உடைந்த ஏசியை கொடுத்தார் என்று மூத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், தனது கணவரும், ஒளிப்பதிவாளருமான வில்லியம்ஸ் உடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த மோகன்லால், அவரது இறப்புக்குக்கூட வரவில்லை என்று கூறியுள்ளார். ஆரம்பத்தில் மோகன்லாலுக்கு குழந்தையின் அப்பாவித்தனம் இருந்தது, ஆனால் பிற்காலத்தில் அவர் மாறிவிட்டார் என கூறியுள்ளார்.




