கேரளா: திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இளம் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி சுமைதூக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் காஞ்சிராம்குளத்தைச் சேர்ந்த அருண் (34) என தெரியவந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 24 வயது இளம் நடிகைக்கு உதவி செய்வதாக கூறி பின்னால் சென்று கட்டிப்பிடித்து அத்துமீறியுள்ளார். நடிகை ரயில் நடைமேடைக்குச் செல்லும்போது, இந்த ஆபாச செயலில் ஈடுபட்டதால், உடனே போலீசில் புகார் அளித்தார்.




