நாம் அனைவரும் நமது பள்ளி பருவ காலத்தில் பல விதிகளை பற்றி படித்துள்ளோம். நமக்கு தெரிந்தது எல்லாம் புவியீர்ப்பு விதி, காந்த சக்தியின் விதி போன்ற விதிகள் மட்டும் தான். அனால் நமக்கு பெரிதும் தெரியாத ஆசிரியர்களாலும் பாடப் புத்தகங்களாலும் சொல்லி குடுக்க முடியாத ஒரு விதி இருக்கிறது. அது தெரிந்தால் நீங்கள் தான் உங்கள் வாழ்வில் அடுத்து என்ன ஆகா போகிறீர்கள், என்ன நடக்க போகிறது என முடிவு செய்வீர்கள்.
அந்த விதியின் முன்னுரையை இப்பதிவில் காண்போம். இதை பற்றி பல பதிவுகள் மேலும் வரவிரிக்கிறது. முன்பு கூறியது போல், இந்த விதி தெரிந்தால் உங்கள் வாழ்வு உங்கள் கையில். இந்த விதியினால் தான் பல வெற்றிகளை பலர் கண்டுள்ளனர். அந்த விதியின் பெயர் தான் ஈர்ப்பு விதி.
இதை பற்றி பல புத்தங்கங்களில் எழுத பட்டுள்ளது. அதில், இரகசியம், அஸ்க் இட் அண்ட் கிவ் இட், திங்க் அண்ட் குரோவ் ரிச், மாயாஜாலம் போன்ற பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்த விதியை வைத்து தான் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த விதியை வைத்து தான் எந்த நல்ல காரியங்களும் காலையில் தொடங்க வேண்டும் என சொல்வார்கள். இந்த விதியினால் தான் நம் நாவில் இருந்து உச்சரிக்கும் வார்த்தைகளை சிந்தித்து பயன்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள்.
சகலத்தையும் மாற்றும் சக்தி கொண்ட இந்த விதியை பின்பற்றும் நபர்கள் பலர். இதில் ஜிம் கேர்ரி, அர்னால்டு, வில் ஸ்மித், ஸ்டீவ் ஹார்வி போன்றவர்கள் பலர் இதை கடைபிடித்து வருகின்றனர். இவ்வளவு ஏன் நமது இந்திய நாட்டு வீரர் ஷிகர் தவான் முதல்கொண்டு இதை கடைபிடித்து வருகிறார்.
இந்த விதியை பற்றி அடுத்தடுத்த விவரங்களை கூடிய விரைவில் காண்போம்.




