நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பாராட்டத்தான் செய்ய வேண்டும் இந்த தருணத்தில்..
கோயிலுக்கு போன இடத்திலும்” நல்லது கெட்டதுக்கு சென்ற இடத்திலும். பொன்னையும் மாப்பிள்ளையும் பார்த்து
உன் மகனுக்கு என்னுடைய பொண்ணு கட்டி கொடு…
உன்னுடைய பொண்ணை என் மனுக்கு கொடு உன் மகள் என் வீட்டு மருமகளா வரவேண்டும் என்று பேசி முடிப்பார்கள்..
ஆணும் பெண்ணும் ஒருவரை முகம் கூட பார்க்க மாட்டார்கள் இருந்தாலும் தாய் தகப்பன் சொல்லிவிட்டார்கள் அவர்கள்
பார்த்த மாப்பிள்ளையும்’ பொண்ணும் நல்லா தான் இருக்கும் என்று சம்மதம் தெரிவித்து திருமணம் முடித்து வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தினார்கள்..
வீட்டுக்கு வந்த மருமகள் எல்லோரிடமும்
அன்பாக இருந்து மாமனார் மாமியார் மதினி நாத்தனார் இவர்களை எல்லாம்
நல்ல முறையில் பார்த்துக் கொண்டு
ஐந்து ஆறு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டு. குடும்பத்தில் சின்ன சண்டை வந்தாலும் அதையும் சமாளித்துக்கொண்டு விவகாரத்து இல்லாமல் குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்…..
ஆனால் இன்று ஒருவருக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்றால் பொண்ணையும் மாப்பிள்ளையும் விசாரித்து. இரண்டு இடத்தில் ஜாதகம் பார்த்து அதற்குப் பிறகு பருஷம் போட்டு.
ஒருவருக்கு மொபைல் போனில் பேசி அன்பை பரிமாறிக் கொண்டும்.
இதற்கு மேலாக தனக்கு வரும் கணவனையும் தனது மனைவியும் தானே தேர்வு செய்து . தன்னை கட்டிக்க போறவனையும் தன்னை கட்டிக்க போறவளையும் தானே தேர்வு செய்து காதலித்து ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு.. தனக்கு பிடித்தவனும் தனக்கு பிடித்தவளும் மாலை மாற்றிக் கொண்டாலும் மன வாழ்க்கை கசக்கத்தான் செய்கிறது இப்போது…
இன்றைய #தம்பதிகள் திருமணம் முடிந்த பிறகு “ஒரு குழந்தையோ “இரு குழந்தையோ பெற்றுக் கொண்டு தனி குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.
அப்படி இருந்தும் குடும்பத்தில் சின்ன பிரச்சனை வரும் போது விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலில் நிக்கிறார்கள். நீங்கள் கோர்ட்டு வாசலுக்கு செல்வதால் உங்களுடைய பிள்ளைகள் கதி என்னாகும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…
பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி சேர்ந்து வாழ்வதற்கு வழியை பாருங்கள்….




