நாடு முழுவதும் 21 பள்ளிகளில் அங்கீகாரம் ரத்து என தகவல் வெளிவந்துள்ளது..
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகள் இணைப்பு அந்தஸ்து மற்றும் தேர்வு விதிகளின் கீழ் இயங்குகின்றனவா என அப்பப்போது ஆய்வு செய்யப்படுகிறது, அந்த வகையில் அண்மையில் டெல்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் இதில் சில பள்ளிகள் போலி மாணவர்கள் சேர்க்கை பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான முழுமையான விசாரணைக்கு பிறகு விதிகளின்படி இயங்காத 21 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மேலும் 6 பள்ளிக்கூடங்களில் தரநிலை குறைக்கப்பட்டுள்ளது, மேற்கூறிய தகவல்கள் சிபிஎஸ்சி செயலாளர் ஹிமான்ஷி குப்தா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 21 பள்ளிகளிலும் 16 பள்ளிகளில் டெல்லியை சேர்ந்தவை 5 பள்ளிகள் ராஜஸ்தானி சேர்ந்தவை என தெரியவந்துள்ளது, இனிவரும் காலங்களில் சிபிஎஸ்சி பள்ளிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் மாணவர்கள் சார்ந்த நலன்களை கண்காணித்தாக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்..!!




