2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது..
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் காலாவதியாகிறது எனவே 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா அல்லது ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்துவிட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது, தற்போதைய கணக்குப்படி 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு 2024 டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும், 2021 செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் நடந்த உள்ளாட்சிக்கு 2026 செப்டம்பரில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் விதி, உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் வெற்றி தோல்வி என்பது 2026 சட்டசபை தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் தற்போது வரை ஒட்டுமொத்த உள்ளாட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தப்படுவது குறித்து எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு சரிபார்ப்பு பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது..!!




