நெஞ்சு வலி முதல் மூட்டு வலி வரை..அனைத்து விதமான வலிகளையும் சரி செய்யும் குப்பைமேனி..!!

 

எல்லா நோயும் எளிதாக நீங்க
குப்பைமேனி மட்டும் போதுங்க.

நெஞ்சு வலி நீங்க

குப்பைமேனி பொடியை மூன்று கிராம் அளவு எடுத்து காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து இரவு சாப்பாட்டிற்கு பின்னால் ஒரு வேளை மட்டும் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூச்சு திணறல் நீங்கும் நீண்ட நாளைய நெஞ்சு வலி நிரந்தரமாக குணமாகிவிடும்

காது வலி நீங்க

ஒரு குப்பைமேனியின் முழு செடியைப் பிடுங்கி இதை தீயில் வாட்டி இதன் இலைகளை மட்டும் பறித்துக்கொண்டு கசக்கி சாறெடுத்து இந்த சாற்றினை இரண்டு துளிகள் மட்டும் வலியுள்ள உடல் அரிப்பு மற்றும் காதில் பிழிந்து விட்டால் சிறிது நேரத்தில் காது வலிகள் குணமாகிவிடும்

புண்கள் குணமாக

குப்பைமேனி இலையை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு வதக்கி இதை ஆற வைத்து சூரணம் செய்து கொண்டு இந்தச் சூரணத்தை நெருப்பால் சுட்ட புண்களின் மேலே தூவி அதன் மீது இரண்டு துளி தேங்காய் எண்ணெய் விட்டு வந்தால் தீயினால் சுட்ட புண்கள்
எளிதாக ஆறிவிடும்

மேலும்

தீராத நோயால்படுத்து இருப்பவருக்கு படுக்கை புண்கள் வந்துவிட்டால் எந்த மருத்துவத்திலும் தீராத புண்களுதக்கு இந்த மருந்தை பயன்படுத்த குணம் கிடைக்கும்

மூட்டு வலிகள் நீங்க

குப்பைமேனி சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து இரண்டையும் தைலப் பதமாகக் காய்ச்சி வைத்து கொண்டு இதை மூட்டில் ஏற்படுகின்ற வலிகளுக்கு தடவி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும்

அசைவில்லாத மூட்டுகளில் அசைவு உண்டாகும் வலிகளும் விலகும்
இதை தொடர்ந்து தடவி வந்தால் மூட்டுகளில் பசை உண்டாகும் பசையில்லாமல் ஏற்படுகின்ற மூட்டு உராய்வின் சத்தங்கள் குணமாகிவிடும்

முகம் அழகாக

குப்பைமேனி இலையையும் மஞ்சளும் சம அளவாக சூரணம் செய்து கொண்டு இதை பசும்பாலில் குழைத்து முகத்தின் மீது தடவி முப்பது நிமிடம் கழித்து வெந்நீர் வைத்து முகம் கழுவி வர முகத்தில் ஏற்படுகின்ற கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் குணமாகி முகம் அழகாக மாறும்

உடல் அழகிற்கு
குப்பைமேனி குளியல் பொடி

குப்பைமேனி சூரணம் ஒரு பங்கு இதில் பாதி அளவு கருஞ்சீரகப்பொடி கலந்து வைத்துக்கொண்டு வாசனை சோப்பிற்கு பதிலாக இதை உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள சரும பிணிகள் அனைத்தும் விலகும் மேலும் படை சம்பந்தமான கரும்புள்ளிகள் தோல் நோய்கள் குணமாகும்

உடலின் தோல் நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அற்புதமான குளியல்பொடி இது

சுவாச கோளாறுகள் நீங்க

காய்ச்சி ஆறவைத்த பசும் பாலுடன் இரண்டு ஸ்பூன் குப்பைமேனி சாறை கலந்து காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தீராத வீசிங் சம்பந்தமான மூச்சுத்திணறல் நோய்களும் குணமாகும்

அனைத்து நோய்களும் விலக

குப்பைமேனிக் கீரையை விளக்கெண்ணையில் வதக்கி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இதனால் வாத நோய்கள் மற்றும் பீனிசம் மேலும் கபம் சார்ந்த நோய்கள் உடல் அரிப்பு மற்றும் உடல் நமைச்சல் ஆகிய அனைத்தும் விலகும் வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் நீங்கும் மலச்சிக்கல் விலகும்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும் உடல் இளைக்கும் வயிற்று உப்புசம் நீங்கி பெருவயிறு குறையும் இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் உண்டு வந்தால் உடலில் வருகின்ற நோய்கள் அனைத்தும் குணமாவதற்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையும்.

 

Read Previous

கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டியவை இதுதான்..!!

Read Next

வெண்டைக்காய் மோர் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க..!! வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular