வெண்டைக்காய் மோர் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க..!! வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் – 13,
ஓரளவு புளிப்பு உள்ள மோர் – 500 மில்லி,
காய்ந்த மிளகாய் – 2,
தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப்,
மிளகு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு தேக்கரண்டி,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும்.
இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சூப்பரான வெண்டைக்காய் மோர்க்குழம்பு தயார்.

 

Read Previous

நெஞ்சு வலி முதல் மூட்டு வலி வரை..அனைத்து விதமான வலிகளையும் சரி செய்யும் குப்பைமேனி..!!

Read Next

ஆண்களுக்காக.. பெண்களைப் பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular