தமிழக சினிமா துறையின் முன்னணி நடிகரும் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் இளைய தளபதி விஜய், இவர் நேற்று சென்னையில் உள்ள அவரது நண்பரின் வளைகாப்பு விழாவிற்கு சென்றபோது நடிகர் விஜயை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்..
நடிகர் இளைய தளபதி விஜயின் நண்பரான பாடல் ஆசிரியர் விவேக் மற்றும் சாரு தம்பதிகளின் வளைகாப்பு விழா சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது, இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார், அப்போது இசையமைப்பாளர் தமன், இயக்குனர் அட்லி மற்றும் அவர் மனைவி பிரியா நடிகர் விஜயை பார்த்து பேசி உள்ளனர், மேலும் தனது நண்பரின் மனைவிக்கு பரிசோடு சென்று அந்த நிகழ்வை நடிகர் விஜய் சிறப்பித்துள்ளார்..!!




