பசியும் ருசியும் நீயடா..!! மிகவும் அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

பசியும் ருசியும் நீயடா..

 

என்னுயிர்க் கோப்பையில்

உன்னை ஊற்றிக் கொண்டபின்

நிதம்..உணர்வின் பசியானது

மணற்கடிகாரம் தனக்குத்தானே

சமநிலை எட்டி காலத்தை

காட்டுவது போல்

நீ குறைந்து நிறைந்து

கடத்துகிறாய்..

நாளொரு பொழுதுமாய்

கணம் ஒரு மாற்றமாய்..

..

யாதொரு பிழையும் தோதொரு

காரணமும் ஏற்றுக் கொள்வதில்லை

..

என்னை நிறைப்பதென்பதே

உனக்கான இரைப்பைக்குள்

பசியாக வேண்டுமென

கட்டளையிடுகிறது..

என்னையே வேண்டி

பெற்ற நின் காதலுக்கு..

..

மோகித்து பெற்ற என்னை

உன்னால் இயன்றவரை

என் தேவைகளை

ஆமோதித்து.. அர்ச்சனை

செய்யென்பதுமே ..

ஊடல்கூடல் பொழுதுகளில்

..

வலித்தாலும் வசியக்காரி

நானாக வேண்டுமென்பதை

மறவாதேடா..மாயக்காரா!

நீ இல்லாத நேரங்களில் உன் நினைவுகளில் வாடும் என் மனம்..!! மிகவும் அருமையான வரிகள்..!!

ஒருபொழுதும்..நான் மறப்பதில்லை

மறுப்பதில்லை.. துறப்பதுமில்லை

நீயே ஆட்கொள்.. என்னை தின்னும்

நினைவின் பிசாசும் நீயாகவே..

வேண்டி நிற்கிறேன்!

..

அப்படியேத் தான்

ராட்சனாக கடவாய்..நீ

..

ஆனமட்டும் என்னை மட்டுமே

நினைவிலும் நிஜத்திலும்

மென்று தின்று.. கொழுத்து

உன்சக்தி கூடி பலமாகி

வெல்ல வேண்டுமென

தூண்டி நிற்கிறேன்

காதலோடு காதலாகியே

எவ்வுலகையும் இன்பா!!

Read Previous

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் போதும்..!! நிறைய பிரச்சினைக்கு தீர்வு உண்டு..!!

Read Next

காரணமே இல்லாமல் காதலித்தால் அது காதல்..!! அழகான வரிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular