படித்ததில் சிரிக்க வைத்த பதிவு மற்றும் சிந்திக்க வைத்த பதிவு..!! கண்டிப்பா அனைவரும் படிங்க..!!

Oplus_131072

கந்தசாமி ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்.. அவர் கடையில் தோசைக்கு தொட்டு கொள்ள சீனி கொடுப்பார்கள். ஆனால் சீனி விலைஉயர்வின் காரணமாக சீனி கொடுக்க முடியவில்லை.

ஒரு போர்டு எழுதி போட்டார்.. ‘இன்று #முதல் தோசைக்கு சீனி கிடையாது’

கிச்சாமி அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர். சாப்பிடப் போனார். முதலில் ஒரு தோசை வாங்கினார். இரண்டாவது ஒரு தோசை வாங்கினார். சீனி கேட்டார். முதலாளி சொன்னார் “சீனி கிடையாது..”.

கிச்சாமி சொன்னார் போர்டை படியுங்கள் “#முதல் தோசைக்கு மட்டும் கிடையாது.. இது இரண்டாவது தோசை”.

முதலாளி தலையில் தட்டி கொண்டே சீனி கொடுத்தார். அடுத்த நாள் போர்டை மாற்றி எழுதினார் ‘இனி #மேல் தோசைக்கு சீனி கிடையாது.

கிச்சாமி மறுநாள் வந்தார்..
இரண்டு தோசைக்கு ஆர்டர் கொடுத்தார். ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு தோசை வந்தது. மேலே உள்ள தோசையை சாப்பிட்டு முடித்தார். சீனி கேட்டார்..

முதலாளி “முடியாது போர்டை பார்” .

கிச்சாமி “நீ போர்டை பார் ‘இனி #மேல் தோசைக்கு தானே கிடையாது? கீழே உள்ள தோசைக்கு கொடு என்றார்.

கந்தசாமி அன்னிக்கு மூடியது தான் ஓட்டலை.

 

Read Previous

விநாயகப் பெருமானுக்கு மிக உகந்த சங்கடஹர சதுர்த்தி தோன்றிய வரலாறு..!!

Read Next

காலையிலேயே சோகம்.. ஆம்னி பேருந்து விபத்து..!! 15 பேர் காயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular