துளசி டீ குடிப்பதனால் நமது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் நீங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
துளசி என்பது மூலிகையில் சிறந்த ஒன்றாகும் துளசி பல்வேறு உபாதைகளை சரி செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் சளி இரும்பல் தலைவலி சுவாச பிரச்சனை இருப்பவர்கள் காலையில் துளசி டீ குடிக்கலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் ஒரு கப் தண்ணீரில் 5 முதல் 6 துளசி இலைகளை இரண்டு நிமிடம் அல்லது மூன்று நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும் அவ்வளவுதான் துளசி டீ ரெடி வேண்டுமானால் இதோடு கொஞ்சம் பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம் ஜீரண கோளாறு வாய்வு தொல்லை சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் துளசி டீயை தினந்தோறும் பருகலாம் என கூறுகின்றனர் சித்த மருத்துவர்கள், மேலும் காலையில் எழுந்தவுடன் நமக்கு ஏற்படும் சில அசௌகரியம் வைத்து சிறுநீரக பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர், எழுந்ததும் உடல் சோர்வாக இருக்கும், காலையில் கழிக்கும் முதல் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் நுரைத்திருந்தாலும், அடிவயிறு பிடிப்பு, அதிக தாக்கம் ஏற்பட்டாலும், சருமத்தில் தொடர் அரிப்பு இருந்தாலும், மருத்துவரின் அணுக வேண்டும் மேலும் துளசி டீ குடிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்…!!




