இந்தியா முழுவதும் இருக்கும் சிபிஎஸ்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதாவது இத்தனை நாட்களாக பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்ச்சி முறை இருந்து வந்தது. அதாவது குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்லும் தகுதி இதனால் மிக சுலபமாக கிடைத்து வந்தது.
ஆனால் இப்போது வந்துள்ள தகவலின் படி இனி மூன்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களை எடுத்தால் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல முடியாது என்று அரசு கூறியுள்ளது. குறைந்த மதிப்பெண்களை எடுத்தால் பெயில் ஆக்கி அதே வகுப்பில் மறுபடியும் படிக்க வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த கல்வியாண்டு இது அமலுக்கு வர இருந்த வேலையில் பல பள்ளிகள் விடைத்தாள்களை திருத்தி குழந்தைகளை அடுத்த கல்வியாண்டிற்கு பிரமோட் செய்து விட்டதால் அடுத்த கல்வியாண்டில் இது நிச்சயம் அமலுக்கு வரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பெற்றோர்களிடம் கையொப்பம் வாங்கி விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.



