பள்ளிகளில் வெளிநபர்கள் தடை.. அரசு உடனடி உத்தரவு..!!

அரசு பள்ளிகளில் பொதுநபர்கள் அல்லது வெளி நபர்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் நோக்கத்திற்காகவும் அல்லது சொற்பொழிவு ஆற்றுவதற்காகவும் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது…

மகாவிஷ்ணு விவகாரம் எதிரொலியாக பள்ளிகளில் வெளி நபர்கள் நுழைய அரசு தடை விதித்துள்ளது தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் பள்ளி கல்வித்துறை என்னிடம் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு தான் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்றும் வெளி ஆட்கள் யாரும் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது, மேலும் பள்ளி வளாகங்களில் உள்ள அங்காடிகளை அகற்றவும் உத்தரிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது விரைவில் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வழிகாட்டுதல் வெளிப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது, மேலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி சார்ந்த அறிவுரைகளை பள்ளி கல்வித்துறையே நடத்தும் என்றும் வெளிநபர்கள் யாரும் பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது, மகாவிஷ்ணுவின் சொற்பொழிவு பெறும் சர்ச்சை மற்றும் மக்களிடையே பெரும் எதிர்ப்பை பெற்றுள்ளதால் இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை ஒத்துழைப்போடு தான் பள்ளிகளில் நிகழ்ச்சிகள்நடக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது..!!

Read Previous

ஆதாரை இலவசமாக புதுப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம்..!!

Read Next

கார்போஹைட்ரேட் கொழுப்பு உணவுகள் உடலுக்கு நல்லதா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular