பழங்காலத் தமிழர்களின் உணவும் வாழ்வு முறையும்..!!

Oplus_131072

 

பண்டையத் தமிழ் மக்களின் சமையல் பற்றி எல்லோருக்கும் தெரியும். தென் இந்திய, இலங்கைப் போன்ற நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அங்கு கிடைக்கும் பொருட்களை வைத்து சமையல் என்ற ஒன்றை சமைக்க ஆரம்பித்தனர். அது உலகத்திலேயே மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்ந்தது. இயற்க்கையுடனும், கிராம சூழ்நிலையும் சுவையான சமையல் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுத்து உபசரித்தனர்.

நமது பாரம்பரிய சமையல் குறிப்பில் மற்றவர்களுக்கு உபசரித்து கொடுப்பது எப்படி என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளனர். பல விதமான காய்கறிகளும், சுவைக் கூட்டுவதற்கும், வாசனைத் தருவதற்கும் பலசரக்கு சாமான்களும், கடல் உணவுகளும், தமிழ் மக்களின் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சாதமும், காய்கறியும் தமிழ் மக்களின் முக்கிய உணவாக உள்ளது. எடுத்துக்காட்டாக முருங்கைக்காய் குழம்பு, பருப்பு, கீரை, ரசம், மசியல், பொரியல், மீன் குழம்பு, கோழிக் குருமா ஆகிய உணவுகள் ஆகும். பச்சை மிளகாய், வெங்காயம், உள்ளிப் பூண்டு, தக்காளி, தேங்காய், இஞ்ஜி, கொத்தமல்லி, கருவேப்பிலை, மிளகு, சீரகம்,புளி போன்றவை காரத்திற்காகவும், மசாலாவாகவும், வாசனைக்காகவும், சுவைக்காகவும் சேர்ப்பார்கள். இவை இல்லாமல் தமிழர்களுக்கு சமையல் இல்லை.

சங்க இலக்கியத்தில் சிறுபாணாற்றுப்படை, மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய நூல்களையும் காலத்திற்க்கு ஆனதும், இடத்திற்கான சமையலும் பற்றிக் கூறியுள்ளது. பலங்காலத் தமிழரின் உணவுகள் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கும், அவர்களின் குலத்திற்க்கான மாதிரியும் சாப்பிட்டிருக்கிறார்கள் இருந்தாலும் எல்லாத் தமிழர்களும், சாதமும், மறக் கறியும், புலாலும் தான் விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள். மதுவும் அருந்தி உள்ளார். நெல்லு சாதமும், வரகு சாதமும் வெள்ளைச் சோள சாதம், நண்டுக் கறியும், மீன் கறி, உடும்புக் கறி, முயல், ஈயல், கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மாங்கனிச்சாறு, மாதுளங்காய், மிளகுப் பொடி, கறிவேப்பிலை பொரியல், எலுமிச்சங்காய் நார்த்தங்காய் ஊறுகாய் ஆகியவையே தமிழ்நாட்டில் இருந்த அனைத்து மக்களும் உண்டதாக தமிழ் இலக்கிய சான்றுகளோடு அ.தட்சிணாமூர்த்தி அவர்கள் கூறியுள்ளார்.

‘கடுகு வைத்துக் காய்கறிகளை தாளிப்பதும்’ ‘பசும் வெண்ணெயில் பொறிப்பது’ ‘முழித்தயிர் பிசைந்து மோர்க் குழம்பு செய்வது’ என்பதை தட்சிணாமுர்த்தி கூறி உள்ளார். பழங்காலத்தில் சாதம், இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம், புட்டு முதலியவற்றைக் கைகளால் தான் சாப்பிடுவார்கள். ஆனால் இன்று எல்லோரும் மேல் நாட்டினர் போல ஸ்பூனாலும் முள்ளுக் கரண்டிகளாலும் தான் சாப்பிடுகிறார்கள். கைகளால் பிசைந்து சாப்பிட்டால் தான் “உடம்பு தேறும்” என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். சிலர் உள்ளங்கையில் பிசைந்த சாதம் பட்டால் தான் “லட்சுமி தேவி வீட்டில் தங்குவாள்” என்றும் கூறுவார்கள். கிராமங்களில்அன்றும் சரி, இன்றும் சரி சாப்பிடும் பொது வெறும் தரையில் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். ஏதாவது ஒரு மனைப் பலகை அல்லது பாயில் அமர்ந்து தான் சாப்பிடுவார்கள். சாப்பிடும் போது அனா வசியமான பேச்சுக்களைப் பேச மாட்டார்கள். ஆனால் இன்று டி.வியின் முன் அமர்ந்து தான் சாப்பிடுகிறோம்.

பண்டையத் தமிழர்கள் சாப்பிடும் முறையை நாம் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். மது கொஞ்சம் தான் அருந்துவார்கள். நீராகாரத்தை உறிஞ்சிதான் குடிப்பார்கள். பசி என்றால் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். கஞ்சி போன்ற திரவ உணவை பசி போகும் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பார்கள். தின் பண்டங்களை மிகவும் சுவைத்து சாப்பிடுவார்கள். தண்ணீரைக் கொஞ்சமாக குடிப்பார்கள். மாம்பழம் மாதிரி உள்ள பழங்களையும் பாயசம் மாதிரி உள்ள திரவ பண்டங்களை நாக்கினால் நக்கி சுவைத்து சாப்பிடுவார்கள். அதிக கெட்டியான பண்டங்களை {எலும்பு, முறுக்கு, கரும்பு} போன்றவற்றை பல்லால் கடித்து மென்று சாப்பிடுவார்கள். நாம் சாப்பிடுவதற்கு நேரம் இல்லை என்றும் ஏதோ ஒன்றை விழுங்கிவிட்டு செல்கிறோம்.

பண்டைய தமிழர்கள் மண் பாண்டங்களில் தான் சமையல் செய்வார்கள். களி மண்ணால் செய்த பாண்டங்களில் சமைத்தாலும் சரி பாத்திரங்களை உபயோகித்தலும் சரி நம் உடல் ஆரோக்கியம் சீராகவும், நன்றாகவும் இருக்கும். உடலுக்கு குளிர்ச்சியும் கூட. களி மண்ணால் செய்த செய்த செங்கலினால் நல்ல உறுதியான கட்டிடங்கள் கிடைக்கும். அதனால் தான் அந்தக் காலத்தில் களிமண் கட்டிடங்களைக் கட்டினர். களிமண்ணில் விவசாயம் செய்தால் விளையும் பண்டங்களில் நல்ல சத்தும், ஆரோக்கியமும் இருக்கும். இதை தெரிந்துக் கொண்டுதான் அவர்கள் களி மண்ணில் எல்லாம் செய்தார்கள். வாழை இலையில் தான் சாப்பிடுவார்கள். விருந்து உபசரிப்புக்கும், உணவகங்களிலும் { ஹோட்டல் } வாழை இலையில் தான் பரிமாறுவார்கள். ஒன்று சுத்தத்திற்காகவும், இரண்டு தண்ணீர் செலவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத்தான்.

அவர்கள் விருந்தோம்பலின் போது பந்தி பரிமாறும் முறையை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். விருந்தோம்பலுக்காக ஏதோ ஒரு இனிப்பு, சாதம்,பருப்பு, இருவகை பொரியல் கூட்டு அவியல் சாம்பார் மசியல் புளிக் கொழம்பு, காரக் குழம்பு, ரசம், அப்பளம், பாயசம், ஊறுகாய், தயிர், உப்பு போன்ற மரக்கறி சமையலும் தண்ணீர் குழம்பு, கெட்டிக் குழம்பு, ஈரல், எலும்புக் கொழம்பு, ரத்தப் பொரியல், வறுவல் என்று மற்றக் கறி வகைகளும் சமையல் செய்வார்கள். அதன் பிறகு எல்லோரும் அமர்வதற்கு பந்திப் பாய் அல்லது ஜமக்காளங்களில் அமரவைப்பார்கள். வாழை இலையை நுனி இலையாக துண்டாக்கி அந்த நுனியிலை அமர்பவர்களின் இடது கைப் பக்கம் வருமாறு பந்தியை தயார் செய்வார்கள். ஒரு ஆள் அமரும் அளவிற்கு இடம் விட்டு பக்கம் பக்கமாக போடுவார்கள். இலையில் தயார் செய்த அத்தனைப் பண்டங்களையும் பரிமாறுவார்கள். மற்றவர்கள் சாப்பிடும் பொழுது பக்கத்தில் இருந்து தேவையானவை கேட்டுக் கேட்டு மீண்டும் கேட்டுக் கேட்டு பரிமாறுவார்கள். இந்த காலத்தைப் போல் டேபிள் சேர் போட்டு தட்டை கைகளில் ஏந்தியோ சாப்பிடவும் மாட்டார்கள், பரிமாறவும் மாட்டார்கள். அந்தக் காலத்தில் செம்பு, பித்தளை, மாக்கல் ஆன பாத்திரங்களை உபயோகப் படுத்தினர். பண்டைய தமிழர்கள் அம்மியில் குழவியால் அரைத்து மசாலாக்கள், சட்னி போன்றவற்றை தயார் செய்தார்கள். உரலில் உலக்கையால் இடித்து நெல் சாதம் கைக் குத்தல் அரிசி, மாவு, இடியாப்ப மாவு ஆகியவற்றை தயார் செய்தார்கள். இட்லி, தோசைக்கு ஆட்டுக்கல்லில் அரைத்தார்கள். திருகைக் கல்லில் அரிசி உப்புமாவிற்கும் பயறுகளை உடைப்பதற்கும், தேங்காய் திருகுவதற்கும், காய்கறிகள் வெட்டுவதற்கு துருவி பலகை, அரிவாள்மனை இடியாப்பம், முறுக்கு பிழிவதற்கு உழக்கும், புடைப்பதற்கு சொளகும், பருப்பு, தயிர், கீரை போன்றவற்றை கடைவதற்கு மத்தும் உபயோகித்தனர் அவற்றை எல்லாம் கையாலேயே அரைத்து செய்ததனால் ருசியும், மணமும் உள்ளவாறு சமைத்து ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் சமைத்தார்கள். இப்படி அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். இன்று நாம் களிமண் குளியல் என்றும் களிமண் சிகிச்சை என்றும் பணத்தை செலவு செய்கிறோம். ஆனால் பண்டையத் தமிழர்களின் விவசாயம், கட்டிடம், சமையல் பாத்திரங்கள் என்று அன்றே எல்லாவற்றிற்கும் களிமண்ணால் ஆனா பொருட்களை உபயோகித்து ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளார்கள். வீட்டிலும் கோவில்களிலும் ஏற்றும் விளக்கும் கூட களிமண்ணால் ஆன விளக்குகளை ஏற்றி உள்ளனர். அவர்களது வாழ்வு எளிமையுடன் ஆனது. நாமும் இனிமேலாவது அவர்களை போல் வாழ பழகி சிக்கனத்தையும் ஆரோகியத்தையும் கடை பிடிப்போம்.

Read Previous

ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் வைத்திய குறிப்புகள்..!!

Read Next

100 நோய்களை குணப்படுத்தும் ஒரே ட்ரிங்க்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular