100 நோய்களை குணப்படுத்தும் ஒரே ட்ரிங்க்..!!

Oplus_131072

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் மதிய உணவிற்கு பின் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் உண்ட உணவு விரைவில் ஜீரணமாகும். உடல் எடையை சீராக வைக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் மோரில் வெந்தயத்தை போட்டு குடித்து வந்தால் வயிறு வலி சரியாகும். மூலநோய் இருப்பவர்கள் மோரில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சாப்பிடவேண்டும்.

உடல் சூட்டால் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். மோர் குடித்து வந்தால் சிறுநீர் பிரச்சனை சரியாகும். வயிற்றுப்போக்கு குழந்தைகளுக்கு இரண்டு விதமாக ஏற்படுகிறது. ஒன்று சாதாரணமாக வயிற்றுவலி மற்றும் கிருமியால் ஏற்படும் வயிறு வலி. வயிற்றுப்போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் போது ஒரு நாளைக்கு நான்கு முறை மோர் கொடுக்கலாம். மோர் அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுப்பதால் சளி பிடிக்கும் என்று நினைக்கும் தாய்மார்கள் மோரில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து குடிக்க கொடுக்கலாம்.

மோர் குடித்து வந்தால் கல்லீரல் நன்கு செயல்படும். உடம்பில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற மோர் பெரிதும் பயன்படுகிறது. உணவில் உள்ள புரத சத்து உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும். மோர் தினமும் குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும். மோருடன் இஞ்சி, மல்லி இலை, சீரகம் சேர்த்து குடித்து வந்தால் செரிமானம் சீராகும்.

மிக்ஸியில் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாட்டில் தயிர், தண்ணீர், சிறிதளவு உப்பு, அரைத்த கலவை ஆகியவற்றை சேர்த்து நன்கு குலுக்க வேண்டும். பின்னர் குடித்து வந்தால் சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணமாகும். வயிற்றை குளிர்ச்சியடையச் செய்ய மோர் பெரிதும் பயன்படுகிறது. வயிற்றை சுற்றி நெய் மற்றும் எண்ணெய் போன்ற கொழுப்பை மோர் கரைத்துவிடும். தயிரில் உள்ள பால்ஆடையை நீக்கிவிட்டு தண்ணீர் கலந்து மோராக்கி குடிக்க வேண்டும்.

மோரில் பப்பாளியை கலந்து சாப்பிட்டால் பித்தம் சரியாகும்.மோரில் பெருங்காயம், சீரகம், உப்பு சேர்த்து குடித்து வந்தால் பெரும்பாலான வாதநோய் குணமாகும். பெருங்குடல் பாதையில் பிரச்சனை, ரத்தசோகை போன்றவற்றை மோர் சரி செய்யும்.

Read Previous

பழங்காலத் தமிழர்களின் உணவும் வாழ்வு முறையும்..!!

Read Next

சங்க இலக்கிய மக்களின் உணவும், வாழ்க்கை முறையும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular