பாம்பு கடித்தவுடன் இதை மட்டும் செய்திடாதீங்க… உயிராபத்து உறுதியாகிடும்..!!

பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்குமே ஒரு இனம் புரியாக பயம் ஏற்படுவது இயல்பு. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி கூட இருக்கின்றது.

அந்தவகையில் பாம்பை கண்டு பயப்படாதவர்கள் மிக மிக அரிது.  அனைவரும் பாம்பு என்றாலே பயப்படுவதற்கு காரணம் அதன் விஷம் தான்.

 

 

பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தனது இரையை வேட்டையாடுவதற்காகவே. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்காகவோ அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்ல. மாறாக மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக மட்டும் தான்.

 

 

அந்த வகையில் எதிர்பாராத வகையில் பாம்பு கடித்தால் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்த விரிவாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

 

என்ன செய்ய கூடாது?

பாம்பு கடித்து விட்டால் உடனடியாக சிலர் துணியால் பாம்பு கடித்த இடத்திற்கு மேல் இறுக்கமாக கட்டிவிடுவார்கள்.இது முற்றிலும் தவறு இப்படி செய்வதால் ரத்த ஒட்டம் தடைப்பட்டு அந்த பகுதி செயலிழந்து போகவும் வாய்ப்பு காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிகின்றனர்.

பாம்பு கடித்துவிடால் ஓடவோ அல்லது நடக்கவோ கூடாது. இது விஷம் உடல் முழுவதும் விரைவாக பரவுததை தடுக்க உதவும். பாம்பு கடித்தவுடன் முதலுதவி செய்வதாக நிகைத்து பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இதனால் முதலுதவி செய்பவருக்கும் உயிராபத்தை ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.

 

பாம்பு கடித்தவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். பாம்பு கடித்தவுடன் பதற்றம் அடைய கூடாது.  அதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து மேலும் பாதிப்பை அதிகமாக்கிவிடும்.

மேலும், கடிபட்ட இடத்தைப் பிதுக்கி நஞ்சை வெளியே எடுக்க முயல்வது, அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி நஞ்சு உடலுக்குள் வேகமாகப் பரவ வழிவகுக்கும் எனவே இவ்வாறான விடயங்ளை செய்ய கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உனனடியாக செய்ய வேண்டியவை

பாம்புக்கடிக்கு ஆளாகும் பட்சத்தில் முதலில் பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். ஆனாலும் அடிப்படையில் நிச்சயமாக உயிர் பயத்தால் பதற்றம் ஏற்படுவது இயல்பு அதன் விளைவாக நஞ்சு பிற பகுதிகளுக்கு வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதால், முடிந்தவரை நிதானத்தை கடைப்பிக்க வேண்டும்.

 

காரணம்  ஆய்வுகளின் பிரகாரம் பாம்புகடிகள் சுமார் 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. அவற்றால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. “வெறும் 5% பாம்புக்கடிகள் மட்டுமே நச்சுப் பாம்புகளால் ஏற்படுகின்றன என்பதால், முதலில் பயப்படுவதையும் பதற்றப்படுவதையும் தவிர்பது நல்லது.

பாம்பு கடித்த 30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரத்துக்குள் அவசியம்  மருத்துவ உதவியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேவேளையில், நாகம் போன்ற வீரியமிக்க நஞ்சைக் கொண்ட பாம்புகளைக் கடுமையாகச் சீண்டிவிட்டு, ஆத்திரமூட்டியதால் ஒருவர் கடிபட்டால், காப்பாற்றுவது கடினம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

பாம்பு  கடித்த இடத்திலோ அல்லது அதைச் சுற்றியோ ஒருவர்  வளையல், கொலுசு, மெட்டி, மோதிரம் போன்ற ஆபரணங்கள் அல்லது கயிறுகளை அணிந்திருப்பின் அவற்றை உடனடியாக அகற்றிவிட வேண்டும். பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி நஞ்சின் விளைவாக வீக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் குறித்த ஆபரணங்கள் ஆபத்தை அதிகரிக்கும்.கடித்த பாம்பின் அடையாளத்தை பார்த்துக்கொள்வது சிகிச்சை வழங்குவதற்கு துணைப்புரியும்.

மேலும் பாம்புக்கடிக்கு உள்ளான நபரை, மருத்துவமனைக்குச் செல்லும் வரையில் அவரது உடலில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து வைத்திருப்பது சிகிச்சைக்கு பெரிதும் துணைப்புரியும்.

Read Previous

குக்கர் கைப்பிடி கழண்டு வருதா?.. அப்போ இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க..!!

Read Next

சருமத்தை மென்மையாக வைக்கும் கோதுமை மாவு.. நம்பமுடியாத உண்மை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular