பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: அமைச்சரை சந்தித்து திரையுலகினர் நன்றி!

 

 

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், இதற்கு திரையுலகினர் பலரும் வரவேற்பும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

 

இதன் தொடர்ச்சியாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், செய்தி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

இந்த சந்திப்பின்போது தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், டி.சிவா, தமிழ்க்குமரன் உள்ளிட்டோர் அமைச்சருக்கு பாரதிராஜாவின் சுயசரிதை புத்தகத்தை வழங்கினர்.

 

பாரதிராஜாவின் திரையுலகப் பங்களிப்பை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி: பரந்தூர் சாலைக்கு புதிய பெயர் சூட்ட விவசாயிகள் முடிவு!

Read Next

இந்த காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைக்காதீங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular