பீர்க்கங்காய் சாம்பார் ஒரு முறை இப்படி வச்சு பாருங்க..!!

பீர்க்கங்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் – 400 gram
துவரம் பருப்பு – 150 கிராம்
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 3
பச்சைமிளகாய் – 2
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் தூள் – 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
தாளிப்பதற்கு – கடுகு, வெந்தயம், சீரகம் – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்
கருவேப்பிலை, மல்லி இலை – சிறிதளவு

செய்முறை

பீர்க்கங்காய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், பூண்டு 3 பல், சின்ன வெங்காயம் 3 போட்டு நன்கு கலந்து குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு இறக்கவும்.

பின்பு ஒரு கடாய் அடுப்பில் வைத்து ஒன்றரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கவும்.

பின்பு தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு இதனுடன் நறுக்கிய பீர்க்கங்காய், சாம்பார் தூள் சேர்த்து சேர்த்து வதக்க வேண்டும்.

இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து சேர்த்து பீர்க்கங்காயை நன்கு வேக வைக்கவும்.

பீர்க்கங்காய் நன்கு வெந்ததும் வேகவைத்துள்ள பருப்பை இதனுடன் சேர்த்து கரைத்த புளி தண்ணீரை ஊற்றவும்.

கலந்து கொதிக்க விடவும்.

சாம்பார் நன்கு கொதித்ததும் இறக்கி வைக்கவும்.

பின்பு தாளிக்கும் கரண்டி அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் கருவேப்பிலை மல்லி இலை சேர்த்து தாளித்து இறக்கி வைத்துள்ள சாம்பாரில் நன்கு கலந்து விட்டால் மிகவும் சுவையான பீர்க்கங்காய் சாம்பார் ரெடி.

Read Previous

பச்சை பட்டாணி குழம்பு செய்வது எப்படி..??

Read Next

PAYTM பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular