பச்சை பட்டாணி குழம்பு செய்வது எப்படி..??

பச்சை பட்டாணி குழம்பு
தேவையனா பொருள்கள்
பச்சை பட்டாணி – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 2
சின்ன தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒன்றரை ஸ்பூன்
மல்லி தூள் – ஒன்றரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால ஸ்பூன்
புதினா இலை – ஆறு
கருவேப்பிலை – சிறிதளவு
தாளிப்பதற்கு பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
சமையல் எண்ணெய் – நாலு ஸ்பூன்
உப்பு – தேவையானது
அரைப்பதற்கு
தேங்காய் – ஒரு கைப்பிடி அளவு
சோம்பு – அரை ஸ்பூன்
கசகசா – அரை ஸ்பூன்
முந்திரி – 6
செய்முறை
சோம்பு, தேங்காய் கசகசா, முந்திரி அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்று இரண்டாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கல்பாசி, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்பு இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
இதனுடன் தக்காளி விழுந்து சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
இதனுடன் பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சை பட்டாணி 10 நிமிடம் வேக விடவும்.
பின்பு இதனுடன் அரைத்த தேங்காய் விழுது நன்கு கலந்து கொதிக்க விடவும்.
கொதித்தவுடன் கடாயை மூடி ஐந்து நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து மல்லி இலை தூவி இறக்கினால் மிகவும் ருசியான பச்சை பட்டாணி குழம்பு ரெடி.
இந்த குழம்பு சப்பாத்தி, இடியாப்பம் ஆப்பம் எல்லாத்துக்குமே ரொம்ப சூப்பரா இருக்கும்.

Read Previous

விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..!!

Read Next

பீர்க்கங்காய் சாம்பார் ஒரு முறை இப்படி வச்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular