புரட்டாசி முதல் சனிக்கிழமை.. அதன் மகிமை..!!

Oplus_131072

புரட்டாசி முதல் சனிக்கிழமை. அதன் மகிமை

புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளிலும் ஒரு சிலர், அந்த மாதம் முழுவதும் விரதம் இருப்பார்கள். எல்லா நாட்களிலும் விரதம் இருக்கமுடியாத பட்சத்தில், புரட்டாசி சனிக் கிழமைகளில் விரதம் இருப்பது நல்ல பலனைத் தரும்.

புரட்டாசி மாதம் பெருமாளை வழிபட, ஏற்ற மாதமாகும்.பெருமாளின்

சனிக்கிழமை சிறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் பீமன் என்ற ஏழை குயவர் வாழ்ந்து வந்தார். அவர் தீவிர பெருமாள் பக்தர்.

வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்து கொண்டார். இவருக்கு சாஸ்திர, சம்பிரதாயம்,.பூஜை வழிமுறை எதுவும் தெரியாது.

தொழில் மற்றும் ஏழ்மைநிலை காரணமாக கோவிலுக்கு போகவும் நேரம் இருக்காது. அப்படியே சென்றாலும் “பெருமாளே!நீயே எல்லாம் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

ஒருநாள் ஓர் எண்ணம் தோன்றியது..கோவிலுக்கு போக நேரமில்லை. ஆகையால் பெருமாளை இங்கே வரவழைத்தால் என்ன?என்று நினைத்து களிமண்ணால் பெருமாள் சிலையையும் ,பூ வாங்க பணம் இல்லாததால் சிறு பூக்களாக உருட்டி மாலையாக தொடுத்து அணிவித்து வணங்கினார்.

அவ்வூர் அரசர் தொண்டைமானும் திருப்பதி பெருமாளின் பக்தர். அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு தங்க பூமாலை அணிவித்து வழிபடுவார்.

ஒருதடவை மாலை அணிவித்து.விட்டு, மறுவாரம் வந்து பார்த்தபோது பெருமாள் கழுத்தில் மண்ணால் செய்த பூமாலை தொங்கியது.

அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சகர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களோ என்ற குழப்பத்திலேயே அரண்மனைக்கு சென்று படுத்தார்.

அன்று அரசன் கனவில் தோன்றிய பெருமாள், பீமனின் பக்தியையும்,தாம் அதனால் மகிழ்வுற்றதையும் விளக்கினார்.

உடனே,மன்னர் தொண்டைமான் அந்த குயவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளையும், பொன்னையும், பொருளையும் அள்ளி கொடுத்தார்.

ஆனால்,அதைக் கண்டு சிறிதும் மயங்காத குயவர் இறுதிவரை தன் விருப்பப்படி பெருமாள் விரதம் இருந்து புரட்டாசி சனிக்கிழமையன்று வைகுண்டபதவி அடைந்தார்.

அந்த பக்தரின் நினைவாக இன்றும் ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் பிரசாதமாக வைக்கப்படுகிறது.

பரந்தாமன், பீமய்யாவின் கனவில் தோன்றி, “உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே! உனக்கு முக்தி அளித்து, வைகுண்டத்தில் அழைத்து கொள்வேன்” என்று கூறியிருந்தார்.

அதன்படியே தொண்டைமான், பீமய்யாவின் பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது.

ஓம் நமோ நாராயணாய

Read Previous

பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைப்பதன் தாத்பரியமும் பலன்களும் தெரியுமா..??

Read Next

கால் நக பூஞ்சை தொற்றால் அவதிப்படுகிறீர்களா..?? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular