கேரளாவில் மனைவியின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவர் தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும், தங்களது 4 வயது குழந்தை முன்னிலையில் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனைவியை மற்றவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




