பெண்களுக்கு காதல் முறிவுகள் அதிகமாக ஏற்பட காரணம் என்ன?.. படித்ததில் பிடித்தது..!!

இங்கு பேசப்படுவது பெண்களின் காதல் பற்றி மட்டுமே ஆண்களின் காதல் பற்றியது அல்ல இந்த கட்டுரை பெண்களுக்கு சார்பானது அல்ல ஆண் பெண் இருவருக்கும் சார்பானதே👍 ஆகவே அமைதியாக நேரம் ஒதுக்கி இறுதி வரை படியுங்கள் இதில் நல்ல விடயங்கள் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் கடந்து செல்லுங்கள் 🙏

இன்றைய கால காதலில் ஆண்,பெண் இருவருக்குமே ஏமாற்றங்களும் தோல்விகளும் இருக்கிறது அதிகமாக காதல் விடயத்தில் ஏமாறுவது அல்லது தோல்வியை சந்திப்பது ஆண்கள் என்ற ஒரு பலமான கருத்து நிலவுகிறது

இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்ததால் பெண்கள் காதலையும்,நட்பையும் கிட்டத்தட்ட ஒரே சமநிலையில் தான் வைத்து பார்க்கிறார்கள் இவை இரண்டிலும் தனக்கு பாதுகாப்பான வாழ்க்கைத் துணையை தேடுவதற்காகவே இவற்றை பயன்படுத்தகிறார்கள்

ஒரு பெண் பருவ வயதை எட்டியதிலிருந்து தனது வாழ்க்கைத்துணை பற்றிய கற்பனை எதிர்பார்ப்புகளுடன் அவள் எங்கெல்லாம் செல்கிறாளோ அங்கெல்லாம் ரகசியமாக தேடுகிறாள் யாராக இருப்பார்? எப்படி இருப்பார்? என்ற அதீத கற்பனையுடன் வாழ்கிறாள் இது எவருக்கம் தெரிவதில்லை இதை அவளது இலக்கை அடையும் வரை ரகசியமாகவே வைத்திருக்கிறாள்

அவளது கற்பனைக்குள் வாழ்க்கைத் துணையானவன் பணக்காரணாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், திறமையானவனாக இருக்க வேண்டும், நல்ல பழக்க வழக்கமுள்ளவனாக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் விட தன் மீது நேசமாகவும்,நெருக்கமாகவும் தனக்கு பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்,என்னும் எதிர்பார்ப்புகளுடன் தேடுகிறாள்

இதற்காக அவள் நட்பாக பழகும் ஆண்களுடன் அவள் எதிர்கபார்த்த விடயங்கள் இருந்தால் காதல் என்னும் அடுத்த அடி எடுத்து வைக்கிறாள் அல்லது அதை நட்போடு நிறுத்திக் கொள்கிறாள் அவ்வாறு காதலுக்குள் நுழைந்தவுடன் காதலிக்கும் நாட்களில் தனது காதலனிடம் தனது எதிர்பார்ப்பில் குறைகள் தென்பட்டால் இந்த காதல் எதிர்கால வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிந்தவுடன் அந்த காதலில் இருந்து அவள் விலகிக் கொள்ள முடிவெடுக்கிறாள்.

இது தவறு அல்ல அவளுடைய பாதுகாப்பு கருதி அவள் எடுக்கும் முடிவு

இங்கு அந்த பெண்ணின் முடிவுகளை புரிந்து விலகிக் கொண்டு தங்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை ஏற்படுத்திக் கொள்ளும் ஆண்,பெண்கள் புத்திசாலிகள்

அப்படியானவர்களின் வாழ்வு பல சந்தர்ப்பங்களில் நன்றாக அமைந்திருக்கிறது

பெரும்பாலும் பெண்கள் ஒரு ஆணை பார்க்கும் முதல் பார்வையிலேயே தான் எதிர் பார்த்த விடயங்கள் அந்த இளைஞனிடம் இருக்கறதா? என்பதை ஓரளவிற்கு கணித்து விடுகிறாள் அதை உறுதிப் படுத்திக் கொள்வதற்காகவே நட்பாக பழக ஆரம்பிக்கிறாள்

ஒரு காதலில் பிணக்கு வரும் போது சம்பந்தப்பட்ட ஜோடிகளோ அல்லது மூன்றம் தரப்பினராலோ பலாத்காரப் படுத்தி அல்லது சமரசப் படுத்தி சேர்த்து வைக்கப்பட்ட காதல் ஜோடிகள் திருமணத்தின் பின்னர் கசப்பான அனுபவங்களுடன் பிரிந்து போனவர்கள் உயிர்துறந்தவர்கள் ஏராளம்

ஏனென்றால் ஒரு ஆண் திருமணத்தின் பின் குடும்பத் தலைவன் என்று இருந்தாலும் அந்த குடும்பத்தை நிர்வகிக்கப் போவது பெண் அவளது மனதினுள் இருக்கும் அந்த எதிர்பார்ப்புகள் சீர் குலைந்து போகும் போது அதன் பிறகு அவளது மனதை சீர் படுத்துவது மிகவும் சிரமம்

இங்கு எல்லா ஆண்களும் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் எடுத்த எடுப்பில் ஒரு பெண் உங்களை காதலித்து விடமாட்டாள் உங்களை முழுவதுமாக புரிந்து கொள்தற்கு நட்பை ஒரு ஆயுதமாக பயனபடுத்தி நட்புடன் பழகுவாள்
அந்த பெண் உங்களுடன் நட்பாக பழகும் போதே உங்கள் வாழ்க்கை என்ன? நீங்கள் எப்படிப் பட்டவர் உங்கள் குடும்ப நிலவரம், எதிர்காலத்தில் உங்களால் என்ன செய்ய முடியும், என்று பல விடயங்களை அறிந்து கொள்வாள்

இவ்வாறு எல்லவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து அது ஓரளவிற்கு சரியாக இருந்தால் திருமணம் முடித்து வாழலாம் என்னும் மன நிலைக்கு வருகிறாள் அல்லது தான் நினைத்த எதுவும் இல்லை எதிர்காலத்தில் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை பிரச்சனைகள் எழும் என்பதை உணர்ந்து கொண்டு அந்த காதலில் இருந்து வெளியேற விரும்புகிறாள்

இது பெண்களின் காதலில் உள்ள ரகசிய உளவியல் உண்மை

இவ்வாறு ஒரு பெண் காதலில் இருந்து விலகுகிறாள் என்றால் அது ஒரு அபாய எச்சரிக்கை என்று இது ஆண்களுக்கும் ஒரு சாதகமான விடயம் தான் பொருத்தமில்லாத காதல் என்று தெரிந்து விட்டால் பலாத்காரப் படுத்தி காதலையும் பாசத்தையும் பெற முடியுமா?

அது நிரந்தரமில்லாதது குறித்த காதலை ஆண்களும் உதறித் தள்ளி விட்டு உங்களுடன் இணைந்து பயணிக்க விருப்பத்துடன் உள்ளவர்களை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும்

ஆகவே ஒரு காதல் தோற்றப் போகிறது என்றால் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்வு அமையப் போகிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள் புத்திசாலியான ஆண்கள் பெண்களிடம் உள்ள இந்த திறமையையும் சக்தியையும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்

ஏன் பெண்கள் பணக்கார துணைகளை தேடி வசதியாக வாழ விரும்புகிறார்கள்? என்றால்

சிறு வயதில் தங்களது குடும்ப சூழல் அவர்களது குடும்பத்தில் நிறைய குழந்தைகள் இருப்பார்கள் சாதாரணமாக உழைக்கும் ஒரு தந்தையால் அவர்களின் அனைத்து விடயங்களையும் நிறைவு செய்து கொடுத்திருக்க இயலாது பெண் பிள்ளைகள் தாய் தந்தையருடன் இருக்கும் போது அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு தந்தையை கஷ்டப் படுத்த மாட்டார்கள்

தான் சிறு வயதில் வாழ முடியாத வாழ்வை திருமணத்தின் பின் வாழலாம் என்று ஆசை கொள்கிறாள் அதற்காகவே தனது எதிர்பார்ப்புகளுக்கு உரிய துணையை தேடுகிறாள் இது தவறு அல்ல

அவ்வாறு தேடும் வசதியான வாழ்க்கைத் துணையாலேயே பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் அதை அவர்கள் பின் நாட்களில் தான் உணர்ந்து மனம் வருந்துகிறார்கள்

புறநானூற்று காதலுக்கும் இன்றைய நவீன காலத்து காதலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை அன்றும் காதலை ஆழமாக நேசிப்பது பெண்கள்தான் இன்றும் ஆழமாக நேசிப்பது பெண்கள்தான் பெண்களின் காதலில் அன்றும் சுயநலம் இருந்தது இன்றும் சுயநலம் இருக்கிறது இது தவறு அல்ல அவர்களுடைய பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்கிறார்கள்

🙏இறுதியாக சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால் பெரும்பாலான பெண்களின் காதல் அடிக்கடி முறிவுகள் ஏற்படுவதற்கு அவர்களது அதீதமான எதிர்பார்ப்புகளும் ஒரு காரணம் 🙏

மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்துகிறோம் ஒரு காதலில் இருந்து பெண் விலகுகிறாள் என்றால் அந்த காதல் தனக்கு பொருத்தமில்லை எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வரும் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று முடிவு செய்த பின்னரே விலகுகிறாள்
இதில் பல விடயங்கள் அடங்கும்

அந்த பெண் தரும் இந்த அபாய எச்சரிக்கையை ஆண்களும் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது

👍உங்கள் முதல் காதல் தோற்றுப் போகிறது என்றால் நீங்கள் நன்றாக வாழப் போகிறீர்கள் என்று அர்த்தம் இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்👍

Read Previous

அண்ணன் தங்கை பாசம் உங்கள் வாழ்க்கையிலும் இது நடந்திருக்கும் கட்டாயம் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

கொடூரம்.. தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. மகளை சீண்டிய தந்தை..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular