தேனி: ஆண்டிபட்டி அருகே தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஆக.20) பெரியகருப்பன் (55) என்பவர் தனது மனைவியுடன் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. இந்த கோர விபத்தில், பெரியகருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவரும், ஜாதகம் பார்க்கச் சென்றுவிட்டு, வீடு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.




