சாம்சங் தொழிலாளர் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒரு தரப்பினுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது..
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினருடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் சி.வி. கணேசன் தாமு அன்பரசன் டிஆர்பி ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதில் தொழிலாளர்களின் பிரதிநிதி குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் CITU சங்க நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லாததால் அந்த தொழிற்சங்கம் மட்டும் வேலை நிறுத்தத்தை தொடர்கிறது, மேலும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆலைகளிலும் அக்: 21 தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளது, சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாகவும் போனஸ் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஸ்ட்ரைக் நடத்தப்படுகிறது இதனால் அன்று உற்பத்தி முடங்கும் சூழல் ஏற்பட உள்ளது அரசுடனே தலையிட்டு தீர்வு காணவில்லை என்றால் பல கோடி நஷ்டம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது, மேலும் samsung ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட காலதாமதம் ஏற்பட்டால் ஸ்ட்ரைக் நீடிக்கும் என்றும் கூறியுள்ளனர்..!!




