தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தாமு, தாமு பேசிய வார்த்தைகள் மாணவர்களிடையே பெரும் சிந்தனை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பலரும் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர் ஆனால் அவை அனைத்தும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்தியாவை பார்த்து உலகமே பயப்பட நமது இளைஞர்கள் தான் காரணம் என நடிகர் தாமு தெரிவித்துள்ளார் கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் மாணவர்களிடையே நடிகர்களுக்கு பேனர் வைப்பதை விடுத்து தந்தைக்கு மரியாதை அளிக்கும்படி படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் மேலும் இரு பக்கமும் ஷார்ப்பாக இருந்தால் கில்லி என பெயரிடப்பட்டதாகவும் மாணவர்கள் ஒரு பக்கமாவது சார்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார், இந்தியாவின் நாளைய வளர்ச்சி இன்றைய இளைஞர்களே என்று இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக நடிகர் தாமு பேசி மாணவர்களை வாழ்த்தியுள்ளார்..!!




