ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ‘ஜன., 2ஆம் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிட்டு விநியோகம் செய்ய வேண்டும். பரிசு தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை ரேஷன் அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.




