போக்குவரத்துக் கழக செலவை குறைக்க புதிய திட்டம்: பயணச்சீட்டு பின்புறத்தில் விளம்பரங்கள்..!!

தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களின் செலவுகளை குறைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, பயணச்சீட்டுகளின் பின்புறத்தில் விளம்பரங்களை அச்சிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் காகிதச் சுருள்களை (Paper Roll) விளம்பர நிறுவனங்களின் மூலம் கட்டணமின்றி பெற அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக, 6 மாதங்களுக்குத் தேவையான சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான காகிதச் சுருள்களை விலையில்லாமல் கொள்முதல் செய்வதற்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசின் மின்னணு கொள்முதல் தளமான tntenders.gov.in மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் செலவைக் குறைத்து, கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

ஒரு முலாம் பழத்திற்காக 14 உயிர்கள் பறிபோன கொடூர சம்பவம் – பழங்கால அரசாட்சியின் இரக்கமற்ற முகம்..!!

Read Next

வங்கி கணக்கு, முதலீடுகளில் நாமினி பெயரை பதிவு செய்வது ஏன் அவசியம்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular