போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் (FIR) உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், மீண்டும் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்று காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு தங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்வது ஏற்க முடியாதது என்றும் CJP குற்றம்சாட்டியுள்ளது.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் CJP-யின் முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.




