இன்று (ஜூன்.29) சிறப்புமிக்க சதுர்த்தி விரதம். வாழ்வில் தடை, கடன், பண பிரச்சனை, திருமண தடை, குழந்தையின்மை உள்ளிட்ட பலவிதமான பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள் அவற்றில் இருந்து விடுபட சதுர்த்தி விரதம் இருந்து முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடலாம். ‘ஓம் கணேசாய நம, ஓம் கண் கணபதயே நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வழிபட அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாக வாழலாம்.




