பாரம்பரிய உணவு வகை சாப்பிடுவதற்கு வாழை இலையை சிறந்த காரணியாக பயன்படுகிறது, வாழை மரத்தில் உள்ள வாழை இலைகள் பாலைப்பூ வாழைத்தண்டு மற்றும் வாழைத்தண்டு சாறு ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகளையும் தருகிறது..
மேலும் வாழை மரத்தின் பெரும்பாலான பாகங்கள் மருத்துவ குணம் கொண்டவை, அவற்றில் வாலையின் பூ பிஞ்சு காய் ஆகியவை வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும், அதேபோல தண்டு நீர் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதோடு பித்தப்பை நச்சுக்களையும் நீக்கும் மேலும் சிறுநீரையும் பெருக்கும், அதனைத் தொடர்ந்து வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது, வாழைப்பழம் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும் உடலை பலப்படுத்தும், அதேபோல் உடலின் நீர் சத்துக் குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் உதவுகிறது, மேலும் வாழைப்பழம் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும் இது அனைத்து சத்துக்களும் கொண்ட சத்துணவு, வாழைப்பூவில் வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளதால் உடலுக்கு பல்வேறு பலன்களை தருகிறது..!!




