மலச்சிக்கலுக்கு சிறந்த பழம் எது தெரியுமா..??

மலச்சிக்கலுக்கு சிறந்த பழம் எது?

பப்பாளி:

வயிறு சார்ந்த பெரும்பாலான பிரச்னைகளை போக்கும் அரணாக பப்பாளி செயல்படுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பப்பாளி சாப்பிடலாம்.
இதில் இருக்கும் ’பாப்பேன்’ (Papain) எனும் என்சைம் செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல் பிரச்னையை வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது.
பப்பாளியை தினமும் சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதே மருத்துவரின் கருத்தாக இருக்கிறது.

2. ஆப்பிள்:

நார்ச்சத்து அதிகம் உள்ளதாக ஆப்பிள் இருக்கிறது. இது குடல் இயக்கங்களை ஊக்குவிக்க உதவுகிறது.
இதில் இருக்கும் பெக்டீன் எனும் நார்ச்சத்து குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
ஆப்பிளை எப்போதும் தோலுடன் சேர்த்து உண்ண வேண்டும்.

3. ஆரஞ்சு:

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை இடைவேளையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இதில் நார்ச்சத்தும் அதிகளவில் உள்ளது.
இதனால் குடலில் தேங்கியுள்ள அசுத்தங்கள் வெளியேறுகிறது.

4. கொய்யாப் பழம் அல்லது பேரிக்காய்:

வயிற்றைச் சுத்தம் செய்யும் திறன் இந்த கொய்யா பழத்தில் பெருகி இருக்கிறது. இதில் ஃபைபர், பிரக்டோஸ், சார்பிடால் போன்ற கூறுகள் நிறைந்துள்ளன. இவை குடல் இயக்கங்கள் சரிவர செயல்பட உறுதுணையாக இருக்கின்றன.
தொடந்து இதை சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான பல பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

5. கிவி:

கிவிப் பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. கூடவே நார்ச்சத்தும் இதில் அதிகளவில் இருப்பதால் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
இதிலிருக்கும் ஆக்டினிடின் எனும் என்சைம் குடலை சுத்தம் செய்யும் வேலையை பார்க்கிறது

Read Previous

உலகின் மிக நீளமான.. நேரான நெடுஞ்சாலை எங்கு அமைந்துள்ளது தெரியுமா..??

Read Next

மன அழுத்தத்தை குறைக்கும் சீதாப்பழம்..!! அனைவரும் கட்டாயம் இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular