மாணவர்களுக்கான கல்வி கடன் தள்ளுபடி அறிவிப்பு..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி முடிவு..!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாணவர்களுக்கான கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் தற்போது இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மதத்தை சேர்ந்த மாணவர்கள் உடைய ரூ. 48.95 கோடி கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக’ அறிவித்துள்ளார். மேலும், ‘1972 முதல் 2010 ஆம் ஆண்டு வரை மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக’ தெரிவித்துள்ளார்.

மேலும், ‘1972 முதல் 2003 ஆம் ஆண்டு வரை உள்ள  அனைத்து படிப்புகளுக்கான கல்வி கடனையும் தள்ளுபடி செய்வதாக’ அறிவித்துள்ளார். மேலும், நிலுவை தொகையை வசூலிக்க சரியான பதிவேடுகள் இல்லாமை  மற்றும் கடன் பெற்ற நபர்களை அடையாளம் காண இயலாமை போன்ற காரணங்களால் தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளார்..

Read Previous

தமிழக அரசில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை..!! 17 பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!!

Read Next

யாருக்கும் இந்த நிலைமை வரவே கூடாது இறைவா..!! படித்ததில் வலித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular