பொதுமக்கள் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால், அந்தத் தொகை அடுத்த மின்கட்டணத்தில் தானாகவே கழித்துக்கொள்ளப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் மின்சார பயன்பாட்டை துல்லியமாக கணக்கீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மின்கட்டண கணக்கீட்டில் முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.




