மிளகுத் தூள் கலந்த 2 டம்ளர் நீரை தினமும் குடிங்க..!!

Oplus_131072

 

மிளகு நாம் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. இது பல்வேறுபட்ட நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

இதற்கு மிளகைப் பொடி செய்து நீரில் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தாலே போதும். இங்கு தினமும் இரண்டு டம்ளர் மிளகு கலந்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

#தேவையானவை:

மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்,
ரோஜாப்பூ இதழ்கள் – 1-2,
உப்பு – 1 சிட்டிகை,
நீர் – 2 கப்

#செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி வேண்டும்.
பின்னர் அதில் 2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும். அத்துடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் 1-2 ரோஜாப்பூ இதழ்களை சேர்த்து கொதிக்க வைத்து,
பின் வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும்.

#நன்மைகள்:

கோடையில் மிளகு நீரைக் குடிப்பதால், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும்.

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுவார்கள். மிளகு நீரை தினமும் இரு வேளைப் பருக வேண்டும். இதனால் குடலியக்கம் சீராக இருக்கும்.

மிளகு நீரை காலையில் ஒரு டம்ளர், இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் என பருக உடல் வறட்சியைத் தடுக்கலாம்.

எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிளகு நீர் ஓர் சிறந்த பானம். மிளகில் உள்ள காரத்தன்மை, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, குறைந்த காலத்தில் அதிக கலோரிகளை வேகமாக கரைக்க உதவும்.

மிளகு நீரை ஒருவர் தினமும் 2 வேளை பருகினால், பசியைக் கட்டுப்படுத்தி, உணவின் மீதுள்ள அதிகப்படியான நாட்டத்தைக் குறைக்கும்.

எலும்பு பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பது, எலும்புகளுக்கு நல்ல பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.

மிளகு நீர் புற்றுநோய் மற்றும் நீரிழிவைத் தடுக்கும்.

மிளகு நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

Read Previous

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.. ஏன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular