மீண்டும் இணைந்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி..!! அப்போ விவாகரத்து என்ன ஆச்சு?..

தமிழ் திரையுலகில் ஜிவி பிரகாஷ் ஒரு நடிகராகவும், இசையமைப்பாளராகும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். சமீபத்தில் இவரும் இவரின் மனைவி சைந்தவியும் சட்டப்படி பிரியப்போவதாக தகவல் ஒன்றை வெளியிட்டனர். அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர்களின் விவாகரத்து மனு குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்த நிலையில்,  இருவரும் இன்று நீதிமன்றத்திற்கு ஒரே காரில் வந்து நேரில் ஆஜராகி,  பிரிவதாக தெரிவித்தனர். இதை பதிவு செய்த  நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. அதன்பிறகு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி மீண்டும் இணைந்து விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

வெள்ளை கரு vs முழு முட்டை இதில் எது சிறந்தது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular