இன்றைய காலகட்டத்தில் தன் முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பியூட்டி பார்லர்கள் சென்று பல ஆயிரங்களை செலவிடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகாக ஒரு சில முறைகளை எல்லாம் பின்பற்றுவார்கள் அந்த வகையில் பாதாமை வைத்து படுப்பதற்கு முன் இதை மட்டும் செய்தால் போதும் முகம் அழகாகும். அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவில் உறங்குவதற்கு முன்பு ஐந்து அல்லது ஆறு பாதாமை நீரில் ஊற வைத்து விட்டு தூங்கவும். மறுநாள் காலையில் எழுந்தவுடன் ஊற வைத்திருந்த பாதாமை அரைத்து பேஸ்ட் செய்து அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 டு 20 நிமிடம் ஊற வைத்து அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதே போல் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் முகம் அழகு பெறும்.




