தவெக பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காளீஸ்வரன் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி இன்று (ஆக.20) உயிரிழந்தார். இந்நிலையில், பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, “2021 முதல் இதுவரை 2041 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் செயல்படும் மின்வாரியத்தின் பொறுப்பற்ற செயல்களே இதற்கு காரணம். முதல்வர் மு.க.ஸ்டாலின், காளீஸ்வரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.




