திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10:30 முதல் மதியம் 1 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களை தேர்வு செய்ய உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். வேலை தேடுபவர்கள் தங்கள் பதிவு அட்டை, சுயவிவரத்துடன் கலந்துகொள்ளலாம். https://www.tnprivatejops.tn.gov.in இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம். முகாமில் பங்கேற்க கட்டணம் இல்லை.




