மை உருவான வரலாறு..!! பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..??

Oplus_131072

*மை உருவான வரலாறு:*

மனிதனது நினைவாற்றலின் வலிமை குறிப்பிட்ட எல்லை கொண்டது. அந்த எல்லையையும் தாண்டி சில விசயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதேவை ஏற்பட்ட போது தோன்றியதுதான் எழுத்துக்கள். ஆரம்பத்தில் மனிதன் எழுதியது அல்லது செதுக்கியது (Carving) கற்களில் மீது தான். பின்பு மரங்களிலும் அதைத்தொடர்ந்து விலங்குகளின் எலும்புகளிலும் ஒரு கூர்மையான கம்பி (Pointed Rod) கொண்டு எழுத்துக்கள் துளையிட்டு செதுக்கப்பட்டது. நாளடைவில் மனிதன் தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் இளைய தலைமுறைகளிடம் பரிமாறிக்கொள்ள களிமண்ணிலும் (Clay) தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்தான்.

✒ இப்படி எழுத்துக்களை உருவாக்க கற்களிலும் மரத்திலும் துளையிட்டு துளையிட்டு சோர்ந்து போயிருந்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கிய கண்டுபிடிப்புதான் இங்க் (Ink) என்று அழைக்கப்படும் மை.

✒ சீன (China) தத்துவவாதியான (Philosopher) டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் கார்பன் நிறமி (Carbon Black), புகைக்கரி (பைன் மர துண்டுகளை (Pine Wood) எரித்து கிடைக்கப்பெற்றது), ஊண் பசை (Gelatin Bone Clue-விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்டது), ஆகியவற்றுடன் விளக்கு எண்ணெய்யையும் (Lamp Oil) சேர்த்து ஆட்டு உரலில் (Mortar and Pestle) இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய திரவத்தை தயாரித்தார்.

இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும்.

Read Previous

கையில் காப்பு கயிறு கட்டுவதன் நோக்கம் என்ன தெரியுமா..??

Read Next

நம் வீட்டை சுற்றி கட்டாயம் இருக்க வேண்டிய மரங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular