Oplus_131072
#யாரையும் #மறக்க_வேண்டாம் !! #கடந்து #சென்று_விடுங்கள் ..
காரணம்
மறக்கிறேன் என்பது உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளும் ஆழ்ந்த பொய் ஆகும் ..
மறக்கிறேன் என்ற வார்த்தைக்கு மெய்ப்பொருள் என்ன தெரியுமா ??
நினைக்கின்றேன் !!
வாழ்நாள் முழுவதும் நினைக்கின்றேன் !!
அந்த நினைவின் வழியே மறந்தவருடன் வாழ்நாள் முழுவதும் வாழ்கின்றேன் !! என்பதே ஆகும் ..
இப்போது கூட யாரையெல்லாம் மறந்திர்கள் ?? என்று உங்களுக்குள்ளே கேட்டு பாருங்களேன் ..
மறந்தவர்கள் எல்லாம் , உங்களுள் உயிர்த்து எழுந்து வந்து நிற்பார்கள் ..
அப்போது
மறந்திர்களா ?? அல்லது மறந்து போல நினைத்துக்கொண்டே இருந்திர்களா ?? என்று உங்களிடமே கேளுங்கள் ..
உங்களைப்பார்த்தே உங்களுக்கு சிரிப்பு தான் வரும் ..
அதே
கடந்து விடுங்கள் ..
மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து அவர்களோடு சண்டை இட்டுக்கொண்டே இருப்பதை விட ..
அவர்களிடம் உங்கள் தரப்பு நியாங்களை மனத்தால் விவரித்து கொண்டே இருப்பதை விட ..
அவர்கள் அப்படித்தான் என்று கடந்து விடுங்கள் ..
உங்களுக்காக
உலகில் நிகழும் அற்புதங்கள் உங்கள் அன்றாட வாழ்வாக அமைத்து கொடுத்து வாழ்வித்து கொண்டே இருப்பவனை ,
உங்களை புரிந்து , உணர்ந்து தனிக்கவனம் செலுத்தி அருளும் அற்புதனாகிய இறைவனை ..
அவன் உங்களுக்காக ஒவ்வொரு நாளையும் வடிவமைத்து தரும் அற்புதத்தை ஆழ்ந்து உள்வாங்கி அனுபவித்து பாருங்கள் ..
வாழ்வே அனந்தமாயமாக இருப்பதை உணருவீர்கள் ..
இதையெல்லாம் உணரவும் ?? அனுபவிக்கவும் ?? வாழ்வும் ?? விடாதே ..
நீங்களே உங்களுக்கு உருவாக்கிக்கொள்ளும் தடைகளில் ஒன்று தான் ..
மறக்கிறேன் என்ற ஒன்றாகும் ..




