“லக்கி பாஸ்கர்” பட புகழ் நடிகை மீனாட்சி சவுத்ரி, தற்போது நாக சைதன்யா மற்றும் நவீன் பாலிஷெட்டி ஆகியோருடன் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த நேர்காணலில், புகழ்பெற்ற இயக்குநர்களான எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் மணிரத்னம் ஆகியோரின் இயக்கத்தில் பணியாற்றுவதே தனது நீண்ட கால கனவு என்று தெரிவித்துள்ளார். மேலும், நாக் அஸ்வின் போன்ற திறமையான இயக்குநர்களுடன் பணிபுரிய விரும்புவதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.




